Ungal kuzhanthaigal
Ungal kuzhanthaigal
Regular price
Rs. 360.00
Regular price
Sale price
Rs. 360.00
Unit price
/
per
ஆரம்பத்தில் குழந்தை அழ,சிரிக்க விரும்பும்.இந்த அழுகை அவனுக்கு ஆழமான தேவையாகும்.அழுகையின் வாயிலாக ஒவ்வொரு நாளும் அவன் உணர்வுகளை வெளியேவீசுகிறான்.குழந்தைக்கு பலவிதமான ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன.அது அப்படிதான் இருந்தாக வேண்டும்.அது தேவையுமாகும்.குழந்தைக்கு ஏதோ தேவைப்படுகிறது.ஆனால், தனக்கு என்ன தேவை என்பதை அதனால் கூற இயலாது.அதை வெளிப்படுத்த அவனால் முடியாது.குழந்தை ஏதோ கேட்கிறது.ஆனால் அதை கொடுக்க முடியாத நிலையில் அதன் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.தாய் அங்கு இல்லாமல் இருக்கலாம்.அவள் வேறு ஏதோ வேலையில் இருந்திருக்கலாம்.அவளால் குழந்தையை கவனிக்கமுடியாமல் இருந்திருக்கலாம்.அந்த கணத்தில் அவனுக்கு கவனம் எதுவும் கிடைக்கவில்லை.எனவே அவன் அழ துவங்குகிறான்.தாய் அவனுக்கு பொம்மையைகொடுக்கிறாள்.பால்கொடுக்கிறாள்,அவனைசமாளிக்க,சமாதானப்படுத்த எதையாவது செய்கிறார்கள்.ஏனெனில், அவன் அழக்கூடாது.
\n
\nஆனால்,அழுகை மிகவும் அவசியமான ஒன்றாகும்.அவன் அழுதால் அவனை அழ விட்டுவிட வேண்டும்.அழுதபின் அவன் புத்துணர்வுடன் இருப்பான்.அந்த ஏமாற்றம் அழுகையின் மூலம் வெளியே வீசப்பட்டுவிட்டது.அழுகையை நிறுத்தி விட்டால் ஏமாற்றமும் உள்ளேயே நின்று விடும்.அவன் அதன்மீது மற்றவைகளை இட்டு நிரப்புவான்.அழுகையும் உள்ளே அதிகரித்துக்கொண்டே போகும்.
\n
\n-ஓஷோ
\n
\n
\n
\n
\n
\n
\n
\nகுழந்தைகளைப் பற்றியும் அவர்களை வளர்ப்பது பற்றியும் உள்ள நூறு ஆண்டுகளான புரிதல்கள் ஓஷோ இந்த நூலில் உடைத்தெறிகிறார்.
\n
\nஒரு கரு குழந்தையாக உருவாதிலிருந்து அதனது மனம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒஷோ தனக்கே உரிய பாணியில் சொல்கிறார்.
\n
\nமனரீதியான முறையான சுதந்திரம் கொடுக்கப்பெற்ற குழந்தை ஒரு மிகச்சிறந்த மனிதனாக வளர இயலும்.இந்தக் கண்ணோட்டத்தில் இதுவரை ஒரு நூலும் வந்ததாகத் தெரிவில்லை!