Manithathin Payanam
Manithathin Payanam
பயாஜித் என்கிற சூஃபி ஞானியைப் பற்றிக் கூறுவர், அவர் மிகவும் மகிழ்ச்சியான மனிதர் .ஏறக்குறைய பரவசமானவர்.யாரும் அவரை மகிழ்ச்சியற்றோ ,முகத்தைச் சுழித்தோ,குறை கூறியோ ,சோகமாய் இருந்தோ பார்த்ததே இல்லை.என்ன நிகழ்ந்தாலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். சில நேரம் நாட்கணக்கில் அவர் உணவில்லாமல் இருப்பார் ,ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். யாரோ கேட்டார்கள்.”பயாஜித்,இப்பொழுதாதவது உங்களுடைய சாவியை ,ரகசியத்தை கூறுங்கள்.உங்களுடைய ரகசியம்தான் என்ன?” அவர் சொன்னார்,”அங்கே ரகசியம் என்று எதுவும் இல்லை.அது ஒரு எளிமையான விஷயம்.ஒவ்வொரு நாள் காலையிலும் நான் கண்களை திறக்கும்பொழுது,கடவுள் எனக்கு இரண்டு மாற்றுகளை கொடுப்பார்.அவர் சொல்வார்:’பயாஜித்,நீ மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறாயா?அல்லது மகிழ்ச்சியற்றா?”.நான்,”கடவுளே ,நான் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறேன்’ எனக் கூறுவேன். அதோடு நான் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுப்பேன்,மகிழ்ச்சியாக இருப்பேன்.அது ஒரு எளிமையான தேர்வு, அது ஒரு ரகசியமல்ல”. மகிழ்ச்சியாகவோ,மகிழ்ச்சியற்று இருப்பதோஉன்னுடைய விருப்பம் என்று முடிவெடுக்கும் நாளில் ,வாழ்க்கையை நீ உன் கைகளில் எடுத்துக் கொள்கிறாய்- நீ குருவாகி விடுகிறாய்.இப்பொழுது நீ வேறு யாரோ ஒருவர் உன்னைத் துயரமாக்குகிறார் என்று எப்பொழுதும் கூறமாட்டாய்.அது அடிமை ஸாஸனம்.