1
/
of
1
Kannadhasan Pathippagham
Kilarchiyalan:Anmeekathin Aathaara Surti-1
Kilarchiyalan:Anmeekathin Aathaara Surti-1
Regular price
Rs. 475.00
Regular price
Sale price
Rs. 475.00
Unit price
/
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
இன்றைய வாழ்க்கை நிலவரத்தின் கசப்பான எதார்த்தத்தை தெள்ளத்தெளிவாக குறிப்பிடுபவர் ஓஷோ நாம் அனைவரும் வளர்ச்சியாளராக மறுபடிவம் பெற்று விட்டால்.. மலரக்கூடிய வாழ்க்கை முறை பற்றிய நமது அற்புத கண்ணோட்டத்திற்கு வடிவம் கொடுத்துள்ளார் இந்த புத்தகத்தில். அவர் விளக்கம் அளித்த கேள்வி பதில் அமர்வுகளில் பிரச்சனைகளாக நாம் சொல்லிக் கொள்ளும் விஷயங்களுக்குள் ஊடுருவி சென்று கேள்விகளை நீர்த்துப் போக வைப்பது இவரின் தனி சிறப்பு.
புரட்சியாளன் என்பவன் அரசியல் மூலமாக அவனுடைய அனுகுமுறையை வெளிப்படுத்தி சமூக கட்டமைப்பை மாற்றி அமைத்தால் போதும் என நினைப்பவர். ஆனால் கிளர்ச்சியாளன் தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டு எதையும் அணுகுகிறான். சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால் தனி மனிதனை மாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தை அவன் கையில் எடுக்கிறான் என்று இரண்டுக்கும் இடையே உள்ள உதாரணத்தை முதலில் கூறிவிடுகிறார். கிளர்ச்சியாளர்களாக செயல்பட்ட சமூகப் பெரியவர்களை பற்றி குறிப்பிடுகிறார்.
எல்லா வதமான மாயைகளையும் கனவு கோட்டைகளையும் உருவாக்கும் ஆற்றல் படைத்தது மனம். மனம் தந்திரமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கு ஒரு எல்லை உண்டு. உண்மையில் மனதின் மரணம் மனதால் அதனை கட்டுப்படுத்த முடியாது. எனவே ஓரளவுக்கான தியானம் மூலமாக அதனை முழுமையாக உணரலாம். நாம் நம் மனவெளிக்கு திரும்பும் போது மட்டுமே சந்தேகம் எழுகிறது .அது சில கணங்கள் நீடிப்பதால் மீண்டும் மனதிடம் திரும்பி விடுகிறோம். உடனே அவநம்பிக்கை விதைக்கும் வேலை ஆரம்பித்து விடுகிறது என மனதின் கண்ணாமூச்சி ஆட்டத்தை குறிப்பிடுகிறார்.
நாம் கற்றுக்கொள்ள தடையாக இருப்பது நம்முடைய எண்ணங்களே என்பதனை கூறி ஒரு பிரச்சனை முடியும்போது வேறு பத்து பிரச்சனைகள் கதவறிக்கை வரிசையாக காத்திருக்கின்றன. ஞானத்தை அறிவதற்கு கொஞ்ச நேரம் மிஞ்சும் என்று நினைத்துக் கொண்டிருந்ததால் இந்த பிரச்சனைகள் பெருகிக்கொண்டே போகும். அதற்கு முடிவே கிடையாது. பல பிரச்சினைகளுக்காக ஒரு துரும்பை கூட எடுத்து போட்டு இருக்காமல் பக்கத்தில் இருக்கும் என்று எப்போதும் குரு மாணவர் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்.நாமே அதனை அனுபவித்து அறிந்து அந்த தடைகளை நீக்கி பிரச்சனைகளை கலைந்து கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்கிறார்.
நீ ஒரு வேடத்தை இருக்கும்போது அதில் முழுமையாக ஒட்டி விட வேண்டும் தான் ஏற்றிருக்க வேண்டிய பாத்திரம் இதுவல்ல என்று தெரிந்தாலும் கூட ஏதாவது ஒரு பாத்திரத்தை நடித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியதற்கு உதாரணமாக நகைச்சுவை கதைகள் கூறுகிறார். முல்லாவும் அவருடைய மனைவியும் சினிமாவுக்கு செல்கின்றனர் .அப்போது கதாநாயகன் நாயகியை அன்புடன் நடத்துகிறார் தழுவுகிறார். இந்த காட்சி எல்லாம் பார்த்துவிட்டு அவருடைய மனைவி நீங்கள் இது போல் ஒரு நாளும் செய்ததில்லை என்கிறாள். கணவன் அது வெறும் நடிப்பு என்கிறான் .இல்லை அவர்கள் உண்மையிலேயே கணவன் மனைவி என்று மனைவி சொன்னதை கேட்டு முல்லா சொல்கிறார் "அவர் பிரமாதமான நடிகன்" என்று இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன் என்று அதிசயிருக்கிறார்.
கடந்த காலத்தை துறப்பவனே கிளர்ச்சியாளன் என்கிறார் ஓஷோ. இந்த உலகத்துக்கு புதிதாக ஏதாவது ஒன்றை கொண்டு வருபவன் தங்களது பொறுப்புகளை தட்டிக் கழித்து துறந்து விடுகிறார்கள். பொறுப்புகளை துறக்கும் அதே தருணத்தில் தங்கள் சுதந்திரத்தையும் துறந்து விடுகிறோம் என்பதை அவர்கள் அறிவதில்லை. பொறுப்பும் சுதந்திரமும் இரட்டை பிறவிகள் என்று விளக்குகிறார். அதிகமான சுதந்திரத்தை நீங்கள் அனுபவிக்க ஆசைப்பட்டால் அதிகமான பொறுப்புகளையும் நீங்கள் சுமக்க வேண்டும் என்கிறார். ரெஸ்பான்ஸ் என்ற வார்த்தையை மேற்கொள்ளல் ஆற்றல் என்று பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறி அதற்கான விளக்கத்தை மிக விரிவாக தருகிறார்.
நல்ல நோக்கங்களுடன் தான் நரகத்திற்கான பாதை அமைக்கப்படுகிறது என்பது ஒரு பழமொழி. மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதில் கிடைக்கும் ஆனந்தம் மிகவும் நுட்பமானது. கர்வம் கலந்தது. நம்மளடைய அறிவுரையை கேட்பவர்கள் அறிந்தவர்கள். கேட்காதவர்கள் அறியாதவர்கள். அவர்களை வைத்து நாம் அறிவாளி ஆகி விடுகிறோம் என்ற நிதர்சனத்தை கூறி நம்முடைய சொந்த அனுபவத்துக்கு நம்முடைய அறிவுரை எப்போதும் பயன்படுவது இல்லை என்று கூறுகிறார்.
நீ வெறும் உடலால் மட்டும் வாழ்ந்து விட முடியாது என்கிறார் இயேசு. அதாவது உணவை மட்டும் கொண்டு வாழ்ந்து விடாமல் உணர்வுகளையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய இருப்புக்கு இரண்டு பரிணாமங்கள் உண்டு .இந்த இரண்டையும் நீ பூர்த்தி செய்தாக வேண்டும். இரண்டின் வளர்ச்சிக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். கடந்த காலம் ஒன்றுக்கு ஆதரவாகவும் இன்னொன்றுக்கு எதிராகவும் இருந்து.. துயரமும் வேதனையும் உருவானது என்று கூறி இரண்டுக்கும் உண்டான வித்தியாசங்களை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறார்.
எப்போதும் நாம் மற்றவர்களை பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருந்து விடுகிறோம். நம்மை பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நீ உன்னை மட்டும் மட்டும் சிந்தித்துப் பார். அது ஒரு தீயாக மாறிவிட்டால் உன்னிடத்தில் நல்ல எண்ணங்களை உன்னால் காண முடியும். உன்னை சுற்றி இருக்கும் எல்லாருக்கும் ஒரு வலுவான சவாலை உருவாக்கி கொடுப்பாய் என்கிறார். கிளர்ந்திடும் போராளி குணம் என்பது எப்பவும் தொற்றி பரவிக் கூடியது. பிறகு நீங்கள் செல்லும் இடமெல்லாம் மக்களிடம் தீ மூட்டி விடுவாய். ஒரு புதிய சிந்தனையில் மனிதன் மற்றும் அவன் எதிர்காலம் பற்றிய ஒரு கருத்தாக்கத்தின் எல்லோரிடமும் பற்றிக் கொள்ளும் என்கிறார்.
வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளையும் அவற்றின் ஆணிவேரிலிருந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். அறிகுறிகளை அகற்ற மாட்டாமல் மூல காரணங்களை வேரறுக்க வேண்டும். அநீதிக்கான காரணங்களை அகற்றி விட்டால்தான் நீதி நிலை நிறுத்தப்படும். ஏதேனும் ஏதேனும் ஒன்றை சார்ந்து இருப்பது என்பது எல்லா வகையான பொருட்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒட்டுமொத்தமாக குத்தகை கிடைப்பது போலத்தான் கடந்த காலத்தோடு கைகோர்த்துக்கொண்டு ,தெரிய வேண்டியிருக்கும் இன்று நடிகர்க்கோ அரசியலிலோ தீவிரமாக சார்ந்து இருப்பதன் பிரச்சனைகளை அப்போதே பேசி இருக்கிறார்.
புத்தகம் முழுவதும் பல்வேறு உதாரணங்கள் கதைகள் நடைமுறை வாழ்க்கை சிக்கல்களில் ஒரு சாதாரண மனிதன் சந்திக்க கூடிய பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இதில் கூறியிருப்பார்
Share
