Kannadhasan Pathippagham
Kadalin Niram Sivappu
Kadalin Niram Sivappu
Couldn't load pickup availability
கடலே வாழ்வாதாரமாய் கொண்டு வாழும் மீனவக்குடும்பங்கள். துருக்கியின் கன்ஸ்டான்டா பகுதி மீனவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கான ஒரேவழி, நீலநிறக் கடல்மாதா தரும் மீன்களும் டால்பின்களுமே.
அவர்களை நசுக்க, ஈவிரக்கமின்றி உள்ளே நுழைகிறான், பணபலமும் அரசுபலமும் ஒருங்கே கொண்ட சுலைமான். டால்பின்களை வேட்டையாடி அவற்றின் எண்ணெய், எலும்புத்தூள்கள் ஆகியனவற்றை வியாபாரம் செய்து பொருள் ஈட்டுவது அவன் எண்ணம்.
இதற்கு அனைத்துப் பெரும்புள்ளிகளையும் தன்வசம் ஆக்கிக் கொள்கிறான் அவன். அனைத்து அங்கீகாரங்களும் அவன் கைமேல் வந்து விழுமாறு அவனுக்கு செல்வாக்கு பெருகுகிறது. டால்பின்களை வாழ்வாதாரத்துக்கு மட்டும் வேட்டையாடி மற்றபடி அவற்றைக் கடலில் வாழவிடும் மீனவர்களில் சிலர், இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்கள் நிலை என்னாயிற்று? எதிர்க்க முடியாது சுலைமானுடன் சேரும் ஏனைய மீனவர்கள், வாழ்ந்தார்களா?
நீலக்கடலின் நிறத்தைச் சிவப்பாக மாற்றிவி சீரானதா?
இரும்புத்திரை விலகியதா?
கூடவே இழைந்தோடும் காதல் கதையும் இதில் உண்டு, நீங்கள் கொண்டாடி படிக்க!
Share
