Haa Itho
Haa Itho
வாழ்வு உன்னைத் தழுவிக் கொள்ள ஒவ்வொரு கணமும் தயாராக உள்ளது. நீ வாழ்விலிருந்து மறைந்து கொண்டிருக்கிறாய். ஏனெனில் நீ பயப்படுகிறாய். நீ உன்னுடைய நிபந்தனைகளின்படி வாழ்வு இருக்க வேண்டும் என விரும்புகிறாய் . நீ வாழ்க்கை ஒரு இந்து அல்லது முகமதியன் அல்லது கிறிஸ்த்துவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய். மேலும் வாழ்வு அதனை செய்ய இயலாது.நீ கீதையைப் பொறுத்து அல்லது குரானைப் பொறுத்து வாழ்வு இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய். மேலும் வாழ்வு அதனை செய்ய இயலாது.
\n
\nவாழ்வின் மீது நிபந்தனைகளை வைக்காதே. வாழ்வின் மீது நிபந்தனைகள் போடுவது அசிங்கமானது. நிபந்தனைகளின்றி திறந்து இரு. மேலும் திடீரென உனது இதயத்தில் சில மணிகள் முழுமையோடு இசைந்து ஒலிக்கும்.இசை எழுகிறது . ஒரு பாடல் பிறக்கிறது.இனி மேலும் நீ ஒரு கற்று கொள்பவனாக அறிந்து கொள்பவனாக தனிப்பட்டு இருப்பதில்லை. முடிவாக நீ கவனிப்பவனாக கூட தனிப்பட்டு இருப்பதில்லை .கவனிப்பவனும் கவனிக்கப்படுவதும் உட்சக்கட்டத்தில் ஒன்றாகி விடுகின்றன.
\n
\nஅது தான் ஞானமடைதலின் ,புத்த நிலையின் நீ இந்த முழுமையின் ஒரு பகுதியாக பிரிக்க இயலாதவனாக ஆகிவிடும் கணம். பிறகு நீ தான் வாழ்வு .எதையும் கற்று கொள்வதற்கு தேவை என்ன? அது நீ தான் அதிலிருந்து நீ தனிப்பட்டவன் அல்ல.யார் கற்றுக் கொள்ள போகிறார்கள்.எதைப்பற்றி கற்றுக் கொள்ளப் போகிறார்கள் . நீ தான் வாழ்வு பிறகு அனுபவப்படுத்தல் எழுகிறது. அறிந்து கொள்ளுதல் அல்ல.ஆனால் அனுபவப்படுத்தல் அறிவல்ல ஆனால் ஞானம்.
\n
\nவெறுமனே கவனி.எதுவும் மறைக்கப்படவில்லை.வெறுமனே கவனி. மேலும் மெது மெதுவாக நீ வாழ்வுடன் செல்லத் தொடங்குவாய். மெது மெதுவாக நீ தனியாக இருக்க மாட்டாய்.நீ வாழ்க்கையை பின் தொடர்வாய் .வாழ்வை பின் தொடர்வதே மதத்தன்மையோடு இருத்தல் ஆகும். கிறிஸ்த்துவை பின் தொடர்வதோ,புத்தரை பின் தொடர்வதோ, மதத் தன்மை அல்ல. ஆனால் வாழ்வைப் பின் தொடர்வதே மத தன்மையாகும்.