{"product_id":"enge-en-magizhchi","title":"Enge en magizhchi","description":"\u003cp\u003eநாம் எல்லோரும் இறைவன் என்ற கடலை அடைவோம். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட ஆறு. நமது வழி தனி, வாழ்க்கை தனி. ஒரு ஆற்றின் தன்மை இன்னொரு ஆற்றுக்கு இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. உலகில் எல்லோருக்கும் பொருந்தும் விதி என்ற ஒன்று இல்லை. ஒரே ஒரு விஷயத்தில்தான் கவனம் செலுத்தவேண்டும். அது அந்த ஆற்றின் ஓட்டம் நிற்கக்கூடாது என்பது, அது தேங்கி குட்டையாகி விடக்கூடாது என்பது. இதை மட்டும்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் உங்கள் உணர்வு தொடர்ந்து வளர வேண்டும், முன்னோக்கி ஓட வேண்டும், உயிரோட்டத்தோடு இருக்க வேண்டும், அப்போதுதான் உங்களால் தடைகளைக் கடந்து முன்னேற முடியும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒவ்வொருவர் தனிப்பட்டவர், அதனால் ஒருவரைப் போல மற்றவர் இருக்க முயன்று தன்னை அழித்துக்கொள்ள வேண்டாம். உங்கள் உணர்வு விழித்தெழட்டும். அது நிச்சயமாக தனது பழக்கத்தைக் கண்டுபிடிக்கும். இமயமலையில் பல நுறு ஆறுகள் தோன்றுகின்றன. கங்கையும், சிந்து நதியும், பிரம்மபுத்திராவும் தமது தனிப்பட்ட பாதையில் ஓடுகின்றன. ஒரு நதியின் பாதையில் மற்றொன்று ஓடுவதில்லை. எல்லா ஆறுகளும் கடலை அடைகின்றன, ஆனால் அவை தத்தம் பாதையில் ஓடுகின்றன. ஒரு ஆறு மற்றொன்றைத் தொடருவதில்லை. ஒவ்வொன்றுக்கும் தனிப்பாதை, தனிபடுகை, தனிவாழ்வு, தனிநீர், தனி பிராணன், கடலை அடையவேண்டும் என்ற தாகம் அவை எல்லாம் கடலை அடைகின்றன.\u003c\/p\u003e","brand":"Kannadhasan Pathippagham","offers":[{"title":"Default Title","offer_id":52546054127929,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0892\/3620\/9977\/files\/EngeYenathuMagizhchi-F.jpg?v=1776849323","url":"https:\/\/kannadhasanpathippagham.com\/products\/enge-en-magizhchi","provider":"Kannadhasan Pathippagham","version":"1.0","type":"link"}