நம் மனமானது எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறது.இரவும் பகலும் ,தூக்கத்திலும் ,விழித்திருக்கும்போதும் மனமானது வேலை செய்துகொண்டிருக்கிறது.ஆகவே அது மிகவும் களைப்படைகிறது.அதனால் தொடர்ந்து நல்ல முறையில் செயலாற்ற முடிவதில்லை.
மனமானது ஓய்வின்றி அரைத்துக் கொண்டிருக்கும் இயந்திரம் போல அது அரைத்துக் கொண்டே இருக்கிறது.அரைப்பதற்கு ஏதும் இல்லையென்றாலும் கூட அது அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்துக் கொண்டிருக்கும்.
ஆகவே மனத்திற்கு எவ்வாறு ஓய்வு கொடுப்பது என்று கற்றுக்கொள்.அப்போது நீ மிகவும் சக்தி வாய்ந்த மனதைப் பெறுவாய்.
Reviews
There are no reviews yet.