Oru Nadigar Uruvagirar

Pages-496
Language: Tamil

Out stock

Out of stock

Author: Constantin Stanislavski

ஆஸ்கர் நாயகர்கள் அனைவரும் போற்றிப் பாதுகாக்கும் உலகப் புகழ் பெற்ற நூல் தற்போது உங்கள் கைகளில்…!
முதன்முதலாக நடிப்புக்கு என்று தனி வரையறைகளையும் இலக்கணத்தையும் உருவாக்கிய மேதை கான்ஸ்தந்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி. ஹாலிவுட் முதல் உலகம் முழுதும் உள்ள சினிமா எனும் கனவு தொழிற்சாலை பல்கலைகழகங்கள் யாவும் நடிப்பு பயிற்சிக்கென ”ஸ்தனிஸ்லாவ்ஸ்கி முறை”யை (Stanislavski Method) பாடமாக பின்பற்றும் அளவுக்கு பிரபலமானது இவரது நூல்கள்.நம்மில் ஒரு சிலருக்கு மட்டுமே இயற்கையாகவோ ….அல்லது இறைவனின் கொடையாகவோ வருவதுதான் நடிப்பு .நடிப்பிற்கு அளவுகோல் என்று எதுவுமில்லை.ஆனால் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அவர்கள் மத்தியில் நல்ல நடிகர் என்று பெயர் வாங்கும் நடிப்பிற்கென எழுதப்படாத ஒரு இலக்கணம் உண்டு.அந்த இலக்கணத்தை எழுத்தில் வடித்தவர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி!
தன் உணர்வுகள், ஏற்றுக்கொண்ட கற்பனை கதாபாத்திரத்தின் உள்ளுணர்வுகள் – இவைதான் ஒரு நடிகர் நடிப்பதற்கு தனக்குள் பயணப்படவேண்டிய பாதை. இந்த இருவகையான உள்ளுணர்வுகளின் சங்கமத்தில் தான் அந்த கதாபாத்திரம் முழுமைபெறுகிறது. ஒத்திகைகளின் மூலம் அந்த உள்ளுணர்வை திறமையாக கையாள்வது எப்படி என்பதை நூலாக எழுதியவர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.
இன்று உலகமே இவரது மூன்று நூல்களையும் நடிப்பிற்கான ‘பைபிள்’என்று போற்றிக் கொண்டாடுகிறது.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக உலக புகழ் வாய்ந்த கான்ஸ்தந்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் நூல்கள் தமிழில் ஏன் வெளிவரவில்லை என்பது ஒரு புரியாத புதிர்.
தமிழ்த் திரை உலக ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் கவியரசர் கண்ணதாசன்.கலை உலகிற்கு கவியரசர் குடும்பத்தினரின் நன்றிக்கடனாகவும், ஒரு சிறு காணிக்கையாகவும் ஸ்தனிஸ்லாவ்ஸ்கியின் நூல்களை முதன்முதலாக தமிழில் வெளியிடுவதில் பெருமைகொள்கிறோம். – காந்தி கண்ணதாசன்

1 review for Oru Nadigar Uruvagirar

  1. Sales Kannadhasan Pathippagham

    SIZE:DEMMY

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Out of stock