மகத்தான நடிகர்கள் அனைவரும் உணர்ந்தோ உணராமலோ பயன்படுத்தி வந்துள்ள அடிப்படை நடிப்புக்கலைக் கொள்கைகளை எழுத்தில் வடித்துள்ளதைத் தவிர தான் வேறு ஏதும் பெரிதாக செய்து விட்டதாக ஸ்தனிஸ்லாவ்ஸ்கி கூறிக்கொள்வதில்லை. அவரது கூற்றுகள் அசைக்க முடியாத விதிகளாகவோ அல்லது அவரது பயிற்சிகள் எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் பொருந்தும் என்றோ ,எல்லோராலும் பயன்படுத்தப்படலாம் என்றோ அவர் கருதவில்லை.குறிப்பாக ,வசனங்களின் உச்சரிப்பு மற்றும் பேசுதல் பற்றிய கேள்விகள் எழும்போது அந்த குறிப்பிட்ட பயிற்சியின் முதன்மைக் குறிக்கோளானது நடிப்புக் கலையின் மாணவரது கற்பனையை தூண்டிவிடும் ஒரு சவாலாக இருக்க வேண்டும்,தனது சொந்தத் தேவைகளை அவன் உணருமாறு எழுப்ப வேண்டும். தனது கலையின் தொழில்நுட்பக் கருவிகளில் உள்ளடங்கியுல்ள ஆக்க சக்தியை புரிந்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.
எலிசபெத் ரேனால்ட்ஸ் ஹாப்குட்
மொழிபெயர்ப்பாளர்,எழுத்தாளர்
Reviews
There are no reviews yet.