நாம் துன்பங்களை வெற்றிகொள்ளத்தான் படைக்கபட்டுள்ளோம். புறமுதுகு காட்டி ஓடி அவற்றால் வெற்றிகொள்ளப்பட அல்ல.நம்மை கவலைகளின் அடிமையாகவோ அல்லது ஆதங்கத்தின் கையாலாகாத இரையாகவோ கடவுள் ஒருபொழுதும் ஆக்குவதில்லை.
**************************************
மிகவும் கடுமையான தடைகளையும் ,சிக்கல்களையும் கடந்து வந்து வாழ்க்கையில் சாதனைகளை நிகழ்த்தியிருப்பவர்கள் அனைவருமே, சோர்வில் உருவாகிற முதலாவது தடையை மட்டுமல்லாமல் இரண்டாவது தடையையும் கூட கடந்து வந்திருக்க கூடும்.அந்த நிலையில் தான் ஒரு மேன்மையான சக்தி போலத் தோன்றுகிற ஒன்று,அவர்களுக்குள் ஊற்றெடுத்து,மிகவும் அதிசயக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்த வைக்கிறது.
**************************************
உங்களுக்கு உள்ளே சக்திகள் இருக்கின்றன.நீங்கள் அவற்றை அறிந்து கொண்டு பயன்படுத்த முடியுமானால் , நீங்கள் எப்போதும் கனவில் காணாத அல்லது மாறமுடியும் என கற்பனையில் காணாத எல்லாவற்றையும் உடையவராக உங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
**************************************
– கண்ணாதாசன் பதிப்பகம்
Reviews
There are no reviews yet.