Niraivana Vazhkaikku Neram Othukkungal

220.00

Size:CR
Pages- 224
1st Edition (Year): 2007`
Language: Tamil

SKU: 978-81-8402-267-4 Category:
Author: J.murusu

இன்றைய தினம் வாழ்வதுதான் முக்கியம்

மார்ஷியல் என்பவர் அருமையான ஆலோசனை சொல்கிறார்,நாளை என்றால் காலதாமதம் ஆகிவிடும்.இன்றே வாழ்ந்து விடுங்கள். இன்றைக்கு மட்டும் வாழுங்கள். வாழ்க்கை பூராவும் உள்ள பிரச்சனைகள் குறித்து இன்றேக்கே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.இன்றைக்கு மட்டும் வாழுங்கள்.

இன்றைக்கு மட்டும் வாழுங்கள்

இருப்பதற்குள் உங்களைச் சரிப்படுத்தி கொள்ளுங்கள். உங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி எல்லாவற்றையும் சரியாக்க முயற்சிக்காதீர்கள்.நீங்கள் யாருடன் பழகினாலும் அவர்களுடன் இணக்கமாக பழக முயற்ச்சி செய்யுங்கள்.

இன்றைக்கு மட்டும் வாழுங்கள்

உற்சாகமான தோற்றத்துடன் இருங்கள். பண்புடன் பழகுங்கள்.புகழ்வதில் தாராளம் காட்டுங்கள்.ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் குற்றம் குறை கண்டுப்பிடித்து கொண்டிருக்காதீர்கள்.ஓர் எடுத்துகாட்டாக விளங்கி மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

இன்றைக்கு மட்டும் வாழுங்கள்

யாருக்காவது நல்லது செய்யுங்கள்.மற்றவர்களின் சொற்கள் உங்களை புண்படுத்த வேண்டாம். பொறுமை இழந்தவராகவும் உங்களை காட்டிக் கொள்ளவும் வேண்டாம்.

இன்றைக்கு மட்டும் வாழுங்கள்

நேற்றைய கவலைகளின் மிச்சங்களை இன்றைக்கு உங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்.நாளைய கவலைகளை முன்கூட்டியே வருவித்துக் கொள்ளாதீர்கள்.

இன்றைக்கு மட்டும் வாழுங்கள்

எதிர்காலத்தை நிறைவில் இருந்து அகற்றுங்கள்.ஒவ்வொரு மணி நேரத்திலும் சிறப்பாக வாழக் கற்றுகொள்ளுங்கள்.கையில் உள்ள வேலையில் முழுமையாக கவனம் செலுத்துங்கள்.

-கண்ணாதாசன் பதிப்பகம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “Niraivana Vazhkaikku Neram Othukkungal”

Your email address will not be published. Required fields are marked *