நலமளிக்கும் தியானங்கள் என்ற இந்தப் புத்தகத்தில் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் படிக்கத் துவங்குங்கள். ஆனால், முழுமனதுடன் துவங்குங்கள். நீங்கள் துவங்குகின்ற அந்த செய்தி, அந்த நேரத்துக்கு உங்களுக்குப் பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். நீங்கள் உங்கள் மனதில் ஏற்கனவே கொண்டுள்ள நம்பிக்கையை அது உறுதிப்படுத்தும் அல்லது உங்களுக்கு சவால் விடுக்கக்கூடியதாக இருக்கலாம். இது வளர்ச்சியின் பகுதியே. நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். எல்லாம் நன்றாகவே நடக்கிறது.
பொதுவாக, ‘மக்கள் முழுக்க முழுக்க தங்கள் உள்ளார்ந்த விவேகத்துடன் இணைந்த நிலையில், தூய்மையான, தெளிவான உள்ளத்துடன் தான் இந்த உலகில் தோன்றுகின்றனர். நாம் வளர, வளர நம்மை சுற்றியுள்ள பெரியோர்களிடமிருந்து அச்சங்களையும், இதற்குமேல் நகரக்கூடாது’ என்று ஒவ்வொன்றிற்குமான வரம்புகளையும் எளிதில் பெற்றுக்கொள்கிறோம். நாம் வயது முதிர்வதற்க்குள், நமக்கே தெரியாத ஏராளமான எதிர்மறை நம்பிக்கைகளை சுமக்க ஆரம்பித்து விடுகிறோம்.
-லூயிஸ் எல். ஹே.
லூயிஸ் எல்.ஹே சுய மேம்பாட்டைக் கற்பிப்பதில் தேர்ந்த விரிவுரையாளர். உலக அளவில் 30 மில்லியன் பிரதிகள் விற்பனையான ‘YOU CAN HEAL YOUR LIFE’ நூல் உள்பட பல நூல்களை எழுதியவர் லூயிஸ் எல்.ஹே. லூயிஸ் எல்ஹே யின் புத்தகத்தை தமிழில் வெளியிடுகிறது கண்ணதாசன் பதிப்பகம்.
Reviews
There are no reviews yet.