பிரச்சனைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாக செய்து உங்கள் தைரியத்தை நீங்கள் தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அமைதியால் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் சரியான வழியைக் கண்டுபிடித்து விடலாம்.
உங்கள் மன உறுதியைக் குறைக்கும் நண்பர்களையும் பிற சக்திகளையும் உங்கள் இதயத்துக்குள் அனுமதிக்காதீர்கள். எப்போதும் நல்லதை மட்டுமே எண்ணி, அதை மட்டும் செய்வது என்பதில் உறுதியாக இருங்கள். சில பிரச்சனைகளுக்கு நாம் அமைதியாக இருந்து காரியங்களை செய்து கொண்டே இருந்தால் போதும். அந்தப் பிரச்சனை தானாகவே விலகிவிடும்.
ஏற்கனவே நம்மால் ஜெயிக்க முடியாத பிரச்சனைகளைக் கூட நமது வெற்றிகள் தான் ஜெயிக்க வைக்கும். புதிய வெற்றிகள் பழைய தோல்விகளையும் வெற்றிகரமாக்க புதிய வழிகளை காண்பித்தருளும். எனவே, மன உறுதியுடன் காரியங்களைச் செய்பவராக உங்களை நீங்களே முயற்சி செய்து உயர்த்திக் கொள்ளுங்கள்.காரியங்களைத் தொடர்ந்து செய்யும் மன உறுதியிலிருந்துதான் ஒவ்வொரு மனிதனும் நீதிநெறியிலும் நியாய உணர்விலும் பக்குவப்பட்ட மாபெரும் மனிதனாக உயர்கிறான்.
கல்கண்டு வார இதழில் வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு
Reviews
There are no reviews yet.