மனிதனின் விடுதலை என்பது அவனது ஆரோக்கியம் போன்றது. ஆரோக்கியம் என்பது ஒரே விஷயம் தான் .பலவிதமான ஆரோக்கியங்கள் என்று கிடையாது.மனிதன் விடுதலை பெறுதல் என்பது உன்னதமான ஆரோக்கிய நிலையாகும்.உச்சம்பெற்ற மலர்ச்சி ஆகும். அது அவர் வாழ்விலிருந்து எழும் நறுமணமாகும். பல்லாயிரம் வருடங்கள் தொடர்ந்து தேடியதன் விளைவாக ,மனிதன் இந்த அறிவியலையும் கண்டுப்பிடித்திருக்கிறான். இந்த அறிவியலை நான் தியானம் என்கிறேன்.
இன்னும் ஒரு பயணம் இருக்கிறது.அது தியானம் ஆகும்.அது,அகம் சார்ந்தது.அதன்மூலம் உங்களை நீங்கள் தேடும்போது,அப்பயணத்தில் உங்களை நீங்கள் கண்டு கொள்வீர்கள். அந்த நாளை அடையும் ஒருவருக்கு ,நம்பகமான ஆசிர்வாதங்கள் அவர்மீது பொழியும் .அந்த ஆசிர்வாத மழை முழுமையானது,மறுதலற்றது.தியானத்திற்கான சாவி மிகவும் சிறியது.எல்லா சாவிகளும் சிறியவைதான்.தியானத்தின் சிறிய சாவி மூலம் அதிகமான அமைதி கிடைக்கும் .எண்ண அலைகள் வீசாது.அலைகள் அற்ற அமைதி வாய்க்கும் .அந்த வெறுமையில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.வேறு எதுவுமே இருக்காது.நான் என்ற உணர்வு ஒரு துளியும் அங்கு இருக்காது .அந்த கணத்தில் முழு உலகமும் தெய்வீகமானதாக மாறி,உங்கள் மீது அருள்மழை பொழியும்.
Reviews
There are no reviews yet.