சே குவாராவின் மகளான அலெய்டா குவாரா, சிறிது காலத்துக்கு முன்பு, ஓர் ஆவணத்தைத் தேடியபொழுது, தனது அம்மா, அப்பாவின் சில சொந்தக் கோப்புகளை ஒழுங்கு படுத்தினார். அப்பொழுது தனது தந்தையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பை கண்டார். அது, ‘பின்பொரு தருணத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திருத்தமும் விரிவாக்கமும் செய்யப்பட்ட புத்தகம் இது’ என்றிருந்தது. இந்த புத்தகம் எப்போதாவது மறுபிரசுரம் செய்யப்பட்டால் உதவும் வகையில், சிறு சேர்க்கைகள், செம்மைப்படுத்துதல், நடை மாற்றங்கள் என்று சில ஒழுங்குபடுத்தல்களை சே குவெரா மேற்கொண்டிருக்கிறார். உண்மையில் மறுபடி வெளியிடப்பட்டிருக்கிறது. அதே குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்பா எழுதிய மற்றவற்றுடன் சேர்த்து விரிவாக்கம் செய்யப்பட்டதாக இதழ்களிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் சே முன்பு சுட்டிக்காட்டிய மாற்றங்கள், திருத்தங்கள் இல்லாமலே புதிய பதிப்பு வெளியாகியிருக்கிறது. சரியான வரலாற்று நினைவுகளை மீட்கும் விதமாகவும், முந்தைய பதிப்புகளின் குறைகளை கருத்தில் கொண்டும், இப்புத்தக்கத்தை மறுவெளியீடு செய்ய கியூப ஹாவானா சே குவாரா ஆய்வு மையம் முடிவு செய்தது. இம்முறை சே குவாராவால் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் முறையாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. கையெழுத்துக்குறிப்பில் அவர் வெளிப்படுத்திய விருப்பமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே இந்தப் புத்தகம், முந்தைய பதிப்புகளை விட மிகவும் துல்லியமானது, முழுமையானது. சே குவெராவின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பினை வெளியிடுவதில் கண்ணதாசன் பதிப்பகம் பெருமகிழ்ச்சி அடைகிறது.
Cuba Purachi Pour Kurippugal
₹450.00
Pages- 384
Language: Tamil
₹450.00
Reviews
There are no reviews yet.