Collection: Osho

ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். 

ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21 இல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.

வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட 'ஓஷியானிக்' என்ற சொல்லிருந்து தம் பெயர் உருவானதாக ஓஷோ குறிப்பிட்டுள்ளார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது எனப் பொருள். இச்சொல் அனுபவத்தை குறிக்கிறது. ஆனால்,அனுபவிப்பவரை குறிக்கவில்லை. எனவே, 'ஓஷோ' என்ற சொல்லை உருவாக்கியதாக ஓஷோ கூறுகிறார். 

கீழைநாடுகளில் இதன் பொருள் 'வானம் பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன் ' என்பதாகும். (ஓஷோ பற்றிய பல புத்தகங்களிலும் கண்ணதாசன் பதிப்பகம் முகப்பில் வெளியிடுகின்ற முன்பக்க உரை)